ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

பரிபாடல் - 8. செவ்வேள்

ADVERTISEMENTS

அருவி தாழ் மாலைச் சுனை.
முதல்வ! நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்.
குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ,
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப,
ADVERTISEMENTS

எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு, மலை முழை.
ADVERTISEMENTS

குன்றத்திற்கும் கூடாக்கும் இடையிலுள்ள வழி
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்து அன்ன, இனம்
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப, சுனை மலர,
கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப, கொடி மலர்
மன்றல மலர, மலர் காந்தள் வாய் நாற,

குன்றத்தின் முழக்கம்
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்! கூடல்
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ,

தலைமகன் தலைமகட்குக் குன்றத்தின் சிறப்புக் கூறுதல்
'தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர்
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று;
வடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி,
நெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர்
ஆராக் காமம், ஆர் பொழிற் பாயல்,

வரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி;
முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,
அடியோர் மைந்தர் அகலத்து அகலா
அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,
புலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும்

தலைமகன் சூளும் தலைவி விலகலும்
'இனி மணல் வையை இரும் பொழிலும், குன்றப்
பனி பொழி சாரலும், பார்ப்பாரும்;....
துனியல், மலருண்கண்! சொல் வேறு; நாற்றம்
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது;
துனியல் நனி 'நீ நின் சூள்.'

வரு புனல் வையை மணல் தொட்டேன்; தரு மண வேள்
தண் பரங்குன்றத்து அடி தொட்டேன்" என்பாய்;
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ?
ஏழ் உலகும் ஆளி திரு வரைவேல் அன்பு அளிதோ?
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின்,

நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும்;
விறல் வெய்யோன் ஊர் மயில், வேல் நிழல், நோக்கி;
அறவர் அடி தொடினும், ஆங்கு அவை சூளேல்;
குறவன் மகள் ஆணை கூறு ஏலா! கூறேல்;
ஐய! சூளின், அடி தொடு குன்றொடு

வையைக்குத் தக்க மணல் சீர் சூள் கூறல்!'

தலைமகனது உரை
யார் பிரிய, யார் வர, யார் வினவ, யார் செப்பு?
'நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி,' நேரிழாய்!
கய வாய் நெய்தல் அலர், கமழ்முகை மண நகை
நயவரு நறவு இதழ், மதர் உண்கண்; வாள் நுதல்;

முகை முல்லை வென்று, எழில் முத்து ஏய்க்கும் வெண் பல்____
நகை சான்ற கனவு அன்று; நனவு அன்று___ நவின்றதை:
இடு துனி கை ஆறா என், துயர் கூரச்
சுடும், இறை; ஆற்றிசின், அடி சேர்ந்து! சாற்றுமின்_____
மிக ஏற்றுதும் மலர், ஊட்டுதும் அவி,

கேட்டுதும் பாணி; எழுதும் கிணை_____முருகன்
தாள் தொழு தண் பரங்குன்று!

தோழி தலைமகளின் கற்புடைமை கூறல்
'தெரி இழாய் செல்க!' என்றாய்; எல்லா! யாம் பெற்றேம்,
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல்;
பருவத்துப் பல் மாண் நீ சேறவின் காண்டை____

எருமை இருத் தோட்டி எள்ளீயும் காளை
செருவம் செயற்கு என்னை முன்னை, தன் சென்னி,
அருள்வயினான், தூங்கு மணி கையால் தாக்கி,
நிரைவளை ஆற்று, இருஞ் சூள்,

தலைமகளிரது செய்தி
வளி பொரு சேண் சிமை வரையகத்தால்

தளி பெருகும் தண் சினைய
பொழில் கொளக் குறையா மலர,
குளிர் பொய்கை அளறு நிறைய,
மருதம் நளி மணல் ஞெமர்ந்த
நனி மலர்ப் பெரு வழி,

சீறடியவர் சாறு கொள எழுந்து;
வேறுபடு சாந்தமும், வீறுபடு புகையும்,
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்,
நாறு கமழ் வீயும், கூறும் இசை முழவமும்,
மணியும், கயிறும், மயிலும், குடாரியும்,

பிணிமுகம், உளப்படப் பிறவும், ஏந்தி;
அரு வரைச் சேராத் தொழுநர்,
'கனவின் தொட்டது கை பிழையாகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
வரு புனல் அணிக எனவரம் கொள்வோரும்,

'கரு வயிறு உறுக எனக் கடம்படுவோரும்,
'செய் பொருள் வாய்க்கா எனச் செவி சார்த்துவோரும்,
'ஐ அமர் அடுக என அருச்சிப்போரும்,
பாடுவார் பாணிச் சீரும், ஆடுவார் அரங்கத் தாளமும்,
மஞ்சு ஆடு மலை முழக்கும்,

துஞ்சாக் கம்பலை______
பைஞ் சுனைப் பாஅய் எழு பாவையர்
ஆய் இதழ் உண்கண் அலர் முகத் தாமரை,
தாட் தாமரை, தோட்தமனியக் கய மலர்,
எம் கைப் பதுமம், கொங்கைக் கய முகை,

செவ் வாய் ஆம்பல் செல் நீர்த் தாமரை,
புனற் தாமரையொடு, புலம் வேறுபாடுறாக்
கூர் ஏயிற்றார் குவிமுலைப் பூணொடு,
மாரண் ஒப்பார் மார்பு அணி கலவி;
அரிவையர் அமிர்த பானம்

உரிமை மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப;
மைந்தர் மார்வம் வழி வந்த,
செந் தளிர் மேனியார், செல்லல் தீர்ப்ப;

பரங்குன்றை வாழ்த்தல்
என ஆங்கு,
உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி,

கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண____
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த____
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்,
மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா,
தண் பரங்குன்றம்! நினக்கு.



கடவுள் வாழ்த்து

பாடியவர் :: நல்லந்துவனார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: பாலையாழ்