ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

பரிபாடல் - 17. செவ்வேள்

ADVERTISEMENTS

ஒருதிறம், கண் ஆர் குழலின் கரைபு எழ,
ஒருதிறம், பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத,
ஒருதிறம், மண் ஆர் முழவின் இசை எழ,
ஒருதிறம், அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப,
ஒருதிறம், பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க,
ADVERTISEMENTS

பரங்குன்றிற்கும் கூடாக்கும் இடைப்பட்ட நிலம்
பாடல் சான்று பல் புகழ் முற்றிய
கூடலொடு பரங்குன்றின் இடை,
கமழ் நறுஞ் சாந்தின் அவர்அவர் திளைப்ப,
நணிநணித்து ஆயினும், சேஎய்ச் சேய்த்து;
ADVERTISEMENTS

மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின்
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று.
வசை நீங்கிய வாய்மையால், வேள்வியால்,
திசை நாறிய குன்று அமர்ந்து, ஆண்டுஆண்டு
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை

வாய்வாய் மீ போய், உம்பர் இமைபு இறப்ப;
தேயா மண்டிலம் காணுமாறு இன்று.

பரங்குன்றின் அலங்காரம்
வளை முன் கை வணங்கு இறையார்,
அணை மென் தோள் அசைபு ஒத்தார்
தார் மார்பின் தகை இயலார்,

ஈர மாலை இயல் அணியார்,
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட,
சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா;
அனைய, பரங்குன்றின் அணி.

தெய்வ விழவும் விருந்தயர்வும்
கீழோர் வயல் பரக்கும், வார் வெள் அருவி பரந்து ஆனாது ஆரோ;

மேலோர் இயங்குதலால், வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ;
தெய்வ விழவும், திருந்து விருந்து அயர்வும்,
அவ் வெள் அருவி அணி பரங் குன்றிற்கும்,
தொய்யா விழுச் சீர் வளம் கெழு வையைக்கும்,
கொய் உளை மான் தேர்க் கொடித்தேரான் கூடற்கும்,

கை ஊழ் தடுமாற்றம் நன்று.

முருகனை எதிர் முகமாக்கி வாழ்த்துதல்
என ஆங்கு,
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட் கொடி,
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர், இறைவ!
பணி ஒரீஇ, நின் புகழ் ஏத்தி,



கடவுள் வாழ்த்து

பாடியவர் :: நல்லழிசியார்
இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்
பண் :: நோதிறம்